இந்தோனேசியாவின் (Indonesia) பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (12) காலை 6.5 ரிக்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
வடக்கு இந்தோனேசியாவின் மக்கள் தொகை கொண்ட மாவட்டமான அபேபுராவிலிருந்து மேற்கு- வடமேற்கே 193 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை உடனடியாக வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் சுனாமி அபாயத்தைத் தூண்டியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை துருக்கியில் மீண்டும் நேற்று (11) காலை 7.25 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.