News

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் முதலில் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் எனவும் இவர்கள் இது தொடர்பில் காணொளி வாயிலாகவே மேன்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிப்படி 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2029 ஆம் ஆண்டிற்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பிரித்தானிய அரசு (UK) நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் குறித்த திட்டத்திற்காக 625 மில்லியன் பவுண்டுகள் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top