ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதன் விளைவாக ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அத்தோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வௌியேற வேண்டிய நிலையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் மாட்ரிட்டின் வடக்கில் உள்ள புறநகர்ப் பகுதியான ட்ரெஸ் கான்டோஸில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தீ வேகமாகப் பரவ வித்திட்டதோடு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நபர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்ரியட்டின் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் இசபெல் டயஸ் ஆயுசோ தமது எக்ஸ் தளத்தில், இக்காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கான ட்ரெஸ் கான்டோஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
’40 நிமிடங்களில் 06 கிலோ மீற்றர்களுக்கு தீ விரைவாகப் பரவியதாக மட்ரியட்டின் பிராந்திய சுற்றுச்சூழல் தலைவர் கார்லோஸ் நோவில்லோ கூறியுள்ளார்.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அண்டலூசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள டாரிஃபாவின் கடற்கரைகளுக்கு அருகிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் இருந்து சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.