ஜேர்மனி நாடுகடத்தியவர்களில் 11 சதவிகிதம் பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள்.
2024ஆம் ஆண்டில், அதிகாரிகள் 20,084 பேரை நாடுகடத்தியதாக ஜேர்மன் ஊடகமான The Redaktionsnetzwerk Deutschland (RND) தெரிவிக்கிறது. அவர்களில் 2,316 பேர் ஆறு வயதுக்கும் 18 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள்.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 11,807 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் 1,345 பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர்.
சிறுபிள்ளைகளை நாடுகடத்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சி ஒன்று, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு பதிலாக இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.