News

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

வொங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அரசின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘தலைநகர் வொஷிங்டனில் வன்முறைக் கும்பல்கள், இரக்கமற்ற குற்றவாளிகள், போதைக்கு அடிமையான மனநோயாளிகள் அதிகளவில்’ ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நகரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து வொஷிங்டனில் வீடற்றோர் தங்களது தற்காலிக இருப்பிடங்களை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு மாற்று இருப்பிடமாக முகாம்களுக்குச் செல்லுதல், போதை பழக்க மீட்பு அல்லது மனநல சேவைகளைப் பெறுதல் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த வாய்ப்புகளை ஏற்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் வீடற்றோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி 7,71,000க்கும் அதிகமான மக்கள் வீடற்று உள்ளனர். வொஷிங்டனில் மட்டும் 5,616 பேர் வீடற்றோராக உள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top