News

ஸ்பெயினில் காட்டுத் தீ : ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது.

இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில், ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை, ஹெலிக்கொப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top