கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர்
பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லபட்டுள்ளன. 320 பேர் வரை பலியாகியுள்ளனர். 9 மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2000க்கும் அதிகமானவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கைபர் பக்துன்வா மீட்பு பிரிவின் செய்தி தொடரபாளர் பிலால் அகமது ஃபைசி கூறுகையில், ‛‛கனமழை, பல பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு படையினர் நடந்தே செல்லும் ிலை உள்ளது. உயிருடன் இருக்கும் மக்களை முதலில் பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேலும் பாகிஸ்தானின் சில இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வ மையம் கணித்துள்ளது.