பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள சுலவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உருவானது.
இதனை தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட முறை அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் அங்குள்ள பல வீடுகள் சேதமடைந்ததால் 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்களிடையே பீதி நிலவுகிறது.