News

கிரீஸ் நடுவானில் தீப்பிடித்த விமானம் 281 பேர் பத்திரமாக மீட்பு

கிரீஸ் நாட்டின் தீவான கோர்பூவில் இருந்து ஜெர்மனியின் டூசல்டார்ப் நகருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த, 273 பயணியர் தப்பினர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, ‘காண்டோர்’ விமான நிறுவனத்தின் விமானம், கிரீசின் கோர்பூவில் இருந்து நேற்று புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களில், நடுவானில் பறந்தபோது, திடீரென இன்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசரமாக தரையிறங்க இத்தாலியின் பிரின்டசி விமான நிலையம் அனுமதி அளித்தது. தீப்பற்றிய நிலையிலேயே, ஒரு மணி நேரம் பயணித்த விமானம், இத்தாலியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் பயணித்த, 273 பயணியர் மற்றும் எட்டு விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பயணிகள் விமானத்தில் போயிங் 757 உலகின் மிகப் பழமையான மாடல்களில் ஒன்றாகும். மேலும் இது அடாரி பெராரி என்று செல்லப்பெயர் பெற்றது, மேலும் இது தற்போது 50 ஆண்டுகால சேவையில் உள்ளது.

போயிங் விமானம் நடுவானில் தீப்பிடித்தது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் அமெரிக்க விமான நிறுவனமான டெல்டாவால் இயக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ்-அட்லாண்டா விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பாதியில் திரும்ப வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top