மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் சொஹொடா மாகாணம் கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று மதியம் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 10 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 40 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்று 24 மணிநேரத்திற்குமேல் ஆன நிலையில் ஆற்றில் அடுத்து செல்லப்பட்ட 40 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.