பாரிஸ் அருகே செய்ன் நதியில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொலை சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி, தலைநகரின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியான சாய்ஸி-லெ-ராய் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே, சடலம் இனம் காணப்பட்ட நிலையில், அன்றைய தினம், அந்தப் பகுதியைத் தேடிய பொலிஸார், அருகில் மூழ்கியிருந்த மேலும் மூன்று உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க அப்பகுதியை சேர்ந்த ஆணுடையது என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவருக்கு உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவரது விவரம் குறித்தும், அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் எந்தவொரு விவரமும் பொலிஸார் வெளியிடவில்லை.