News

காசா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

 

நகரின் புறநகர்ப் பகுதிகளை ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் காசாவின் முக்கிய நகரான காசாசிட்டியை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் காசா சிட்டி முழுவதையும் கைப்பற்ற திட்டமிட்டு தரைவழி தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. மேலும் அந்த நகரின் புறநகர்ப் பகுதிகளை ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top