ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த அசர்பைஜான், தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள அசர்பைஜானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், தனது நடுநிலையான நிலைப்பாட்டை மாற்றியுள்ள அசர்பைஜான், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க உள்ளது.
முன்னதாக, ரஷ்யாவும் அசர்பைஜானும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கின.
ஆனால், சமீபத்திய ரஷ்யாவின் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.