News

கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள்: ஆராய்ச்சியாளர்கள் உறுதி

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின் போது ஜூலை 2024 இல் முதன்முதலில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கமைய கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சனா திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவா வழங்கிய தொல்பொருள் நிபுணத்துவத்துடன் குறித்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, இதுவரை நாடு முழுவதும் 17 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள்: ஆராய்ச்சியாளர்கள் உறுதி | Colombo Port Mass Grave Skeletal Of 88 Found

இலங்கையில் பல மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வலயமுமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக கொழும்பு துறைமுக புதைகுழி காணப்படுகிறது.

கடந்த 2024 ஜுலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்போது அப்போதைய பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக் கலாம் என்ற சந்தேகம் அப்பொது வெளிப்பட்டிருந்தது. குறித்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக காவல்துறை என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனிதப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top