ரெகோ டிக்’ திட்டம் வாயிலாக பாகிஸ்தான் பெரும் பணக்கார நாடாக மாற உள்ளது. இத்திட்டத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 3,579 கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் மலைகளில், உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத தாமிரம் மற்றும் தங்கம் இருப்புகள் உள்ளதாக நம்பப் படுகிறது.
நிதியுதவி இவற்றை வெட்டி எடுக்கும் சுரங்க திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 3,579 கோடி ரூபாய் நிதியுதவியை பாகிஸ்தான் பெறுகிறது.
‘ரெகோ டிக்’ சுரங்க திட்டம் என்பது வட அமெரிக்க நாடான கனடாவின் ‘பேரிக் கோல்டு’ நிறுவனம், பாகிஸ்தான் அரசு மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசு இணைந்த கூட்டு நிறுவனமாாகும்.
இத்திட்டத்தில், பேரிக் கோல்டு நிறுவனம், 50 சதவீத பங்கும், பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகள் தலா 25 சதவீத பங்கையும் கொண்டிருக்கும்.
ரெகோ டிக் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 57,420 கோடி ரூபாயாகும். சமீபத்திய ஆய்வின்படி, ரெகோ டிக் சுரங்கத்தில் 15 லட்சம் டன் தாமிரம் மற்றும் 7.37 லட்சம் கிலோ தங்கம் இருப்பு உள்ளதாக தெரிகிறது.
இது உலகின் மிக குறைந்த விலையில் தாமிர உற்பத்தி செய்யும் சுரங்கங்களில் ஒன்றாகவும், உலகின் ஐந்தாவது பெரிய தாமிர சுரங்கமாகவும் மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.