News

ஒரே மாத்தில் 4 ஆவது முறை – ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளானர்.

அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒரே மாதத்தில் ஏற்படும் நான்காவது வலிமையான நிலநடுக்கம் இதுவாகும்.

குரில் தீவுகளின் கிழக்கே உள்ளூர் நேரப்படி இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரில் நிலவும் தொடர்ச்சியான நில அதிர்வுகளால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியான இங்கு, சமீப வாரங்களாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி கம்சட்கா தீபகற்பத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது சில பகுதிகளில் தற்காலிக அவசரக்கால நிலை அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், பெரிய கட்டமைப்பு சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. தொடர் அதிர்வுகள் காரணமாகப் பொதுமக்கள் மட்டும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top