News

அரிய வகை காந்தங்களை தராவிட்டால் சீனாவுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

 

 

அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏகபோக உரிமை தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் மிக முக்கியமாக அரிய வகை காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தியில், நம் அண்டை நாடான சீனா ஏகபோக உரிமையை கொ ண்டுள்ளது. இதன் காரணமாக, உலக வர்த்தகத்தில் தனி செல்வாக்குடன் சீனா உள்ளது.

இந்நிலையில், அரிய வகை காந்தங்களின் ஏகபோக உரிமையை தன் கட்டுப்பாட்டில் புத்தி சாலித்தனமாக சீனா வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

அதே வேளையில், அமெரிக்காவுக்கு இந்த அரிய வகை காந்தங்களை வழங்கவில்லை என்றால், சீனா மீது 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது: அமெரிக்கா – சீனா இடையே சிறப்பான உறவு இருந்தாலும், சீனாவை விட அமெரிக்கா அதிக செல்வாக்கை கொண்டு உள்ளது. அவர்களை விட எங்களிடம் மிகப் பெரிய மற்றும் சிறப்பான அஸ்திரங்கள் உள்ளன.

சீனாவை அழிப்பேன் நான் அந்த அஸ்திரங்களை பயன்படுத்தினால், அது சீனாவையே அழித்து விடும். ஆனால், நான் அந்த அஸ்திரங்களை உபயோகிக்கப் போவதில்லை.

அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு சீனா வழங்க வேண்டும்; அவர்கள் அவ்வாறு வழங்கவில்லை என்றால், நாம் அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக எதையாவது வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பினரும் வரி விதிப்புகளை அதிகரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், அரிய வகை கனிமங்கள் குறித்த சர்ச்சையால் பதற்றம் நீடிக்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top