News

எங்கள் வசமுள்ள ஆயுதங்களால் சீனாவை அழிக்க முடியும் பகிரங்கமாக தெரிவித்த ட்ரம்ப்

 

எங்கள் வசமுள்ள சில முக்கிய ஆயுதங்களை பயன்படுத்தினால் சீனாவை அழிக்கக்கூடும் என கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீனா மீது 200% வரி விதிப்பது தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சீ சின்பிங் உடன் சமீபத்தில் பேசியதாகவும், பீஜிங் பயணம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டின் இறுதி அல்லது அதற்கு பிறகு சீனா செல்வதாகவும், சீன ஜனாதிபதி இதற்கான அழைப்பை வழங்கியதாகவும் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே ஒருங்கிணைந்த உறவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ட்ரம்ப், நாங்கள் சீனாவுடன் சிறந்த உறவை கொண்டிருக்க போகிறோம். அவர்களிடம் சில ஆயுதங்கள் உள்ளன. எங்களிடமும் அதைவிட நம்ப முடியாத சில ஆயுதங்கள் உள்ளன. ஆனால், நான் அதை பயன்படுத்தி விளையாட விரும்பவில்லை. அதை பயன்படுத்தினால் சீனாவை அழித்துவிடும் என்று அவர் கூறினார். ஓகஸ்ட் 12ஆம் திகதி அமெரிக்காவும், சீனாவும் தங்கள் வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்களுக்கு நீடிக்க ஒப்பு கொண்டன.

கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் சர்ச்சைகளை தீர்க்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு அதிகநேரம் வழங்குவதற்காக இந்த இடைநிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகள் மீதான வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியுள்ளது. அதிகபட்ச வரி 145%ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்கள் தற்போது 30% வரியை எதிர்கொள்கின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா இறக்குமதிகளுக்கு 10% வரி விதித்து இருக்கிறது சீனா. சீனா, அமெரிக்காவிற்கு காந்தங்களை தொடந்து வழங்காவிட்டால் நாம் அவர்களிடம் 200% வரி வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top