News

லண்டனில் பதற்றம்! புகலிட கோரிக்கையாளர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம்

மேற்கு லண்டனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக போராட்டம் வெடித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை எப்பிங்கில் உள்ள பெல் விடுதியில் தங்க வைப்பதை தடுக்கும் தடைச் சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் வெற்றிகரமாக தடை செய்திருந்தது.

இதனையடுத்தே, பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

எவ்வாறாயினும், குறித்த வெற்றிகரமான தடைக்கு பிறகும் 13 உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடுதிகளை பயன்படுத்த கூடாது என்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வெஸ்ட் டிரேட்டன் பகுதியில் நடந்த போராட்டத்தின் 5 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லண்டனில் பதற்றம்! புகலிட கோரிக்கையாளர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் | Protest Against Asylum Seeker In London

மேலும், முகமூடி அணிந்த சிலரும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top