போலந்து தனது வான்வெளியில் ரஷ்ய ட்ரோன்களை நேற்று புதன்கிழமை அதிகாலைசுட்டு வீழ்த்தியது, போலந்து பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்த பின்னர். போலந்து நேரடியாக ரஷ்ய சொத்துக்களை அழிப்பதில் ஈடுபட்ட முதல் முறை இதுவாகும்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களின் போது போலந்தின் வான்வெளி பெருமளவிலான ட்ரோன்களால் மீறப்பட்டது என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறினார், இதை போலந்து இராணுவம் “ஆக்கிரமிப்பு செயல்” என்று அழைத்தது.
வோர்சோவின் முக்கிய மையமான சோபின் உட்பட நான்கு விமான நிலையங்களை மூடுமளவுக்கு ட்ரோன்கள் போலந்துக்குள் ஆழமாக பறந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு போலந்துப் பிரதமர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார், நேட்டோவின் பொதுச்செயலாளருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.