மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மாரின் மத்திய அரசாங்கத்திடமிருந்து சுயாட்சியைக் கோரும் ஒரு பிரிவாக இது கருதப்படுகிறது.