ரஷியா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் பலர் இந்த போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது. போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் ரஷியாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. ஆண்டுக்கு 1.7 கோடி டன் அளவில் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடும் இந்த ஆலையை குறிவைத்து டிரோன்களை ஏவியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ரஷிய வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானிலேயே இடைமறித்து தகர்த்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.