News

ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி வெடித்த பாரிய போராட்டம்

 

ஜெனீவாவில் (Geneva) இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த பாரிய மக்கள் பேரணியானது நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசத்திற்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த பேரணியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் இங்கிருந்து அல்ல ஜெனிவா சென்று கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி வழங்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக விசாரணையைத் தான் ஐ.நா. மனித உரிமைகளின் பேரவையின் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் இறையாண்மையை மீறி சர்வதேச சமூகம் செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top