News

மாலியில் 40 எண்ணெய் டேங்கர்களை தாக்கி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்

 

ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சி குழுவும் ஒன்று. இந்த கிளர்ச்சி குழுவானது மாலியில் எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது.

அதன்படி கயேசில் இருந்து தலைநகர் பமாகோ நோக்கி 100-க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் ராணுவ பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தன. அப்போது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 எண்ணெய் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தாக்குதல் தொடர்ந்தால் அடுத்த 2 வாரங்களுக்குள் முற்றிலும் எரிபொருள் தீர்ந்து விடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top