Canada

கனடா இந்தியர்களுக்கு எதிரான இனவெறி வாசகத்தால் சர்ச்சை

 

வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் விசா சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீடிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள்.

அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம். விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம்.

அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.

கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான விசா சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் ” என்று கூறினார்.

கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மிசிசாகாவில் உள்ள ஒரு குழந்தைகள் பூங்கா அருகே ‘இந்திய எலிகள்’ என்று இனவெறி வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட கனடா வாழ் இந்தியர்களும், ஹிந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top