News

நேபாளம் போராட்டத்தின் போது தப்பிய 7,700 கைதிகள் சிறை திரும்பினர்

 

நேபாளத்தில், சமூக ஊடகங்கள் மீதான தடை, அரசியல்வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு எதிராக இளம் தலைமுறையினர் சமீபத்தில் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பெருமளவுக்கு வன்முறை ஏற்பட்டது.

இந்த போராட்டத்தின்போது, நாடு முழுதும் உள்ள சிறைகளில் இருந்து, 14,558 கைதிகள் தப்பிச் சென்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பத்து கைதிகள் இறந்தனர்.

தப்பிச் சென்றவர்களில், 7,700க்கும் மேற்பட்ட கைதிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top