ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க 295 எம்பிக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடந்தது. 5 பேர் போட்டியிட்டனர். இதில், முன்னாள் முன்னாள் பொருளாதார பாதுகாப்புத்துறை அமைச்சர், 64 வயதான சனே தகைச்சி வெற்றி பெற்று LDP கட்சியின் தலைவராக தேர்வானார்.
கட்சி தலைவரே பிரதமராகவும் இருப்பார் என்பதால், அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் பார்லிமென்ட் கூட்டத்தில் சனே தகைச்சி பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.