இலங்கை தொடர்பில் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க மேலும் 22 நாடுகள் முன்வந்துள்ளன.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்துக்கு, ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன.
இந்த நிலையில், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஜெனீவா ஆணையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க, மேலும் இருபத்தி இரண்டு நாடுகள் முன்வந்துள்ளன.
2025, ஒக்டோபர் 1 அன்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக, இந்த நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த தீர்மானம் ஒக்டோபர் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை நீடிப்பு இலங்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஜெனீவாவின் மேற்பார்வையின் கீழ் வைத்திருக்கும். அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தின் காலமும் இந்தத் தீர்மானத்தின் மூலம் நீடிக்கப்படும்.