News

சிறிலங்கா அரசின் மற்றுமொரு கொடூர பக்கம்: சர்வதேசத்திற்கு விற்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள்

பாகிஸ்தானுக்கு (Pakistan) 35000 விழிகளை இலங்கை தானம் செய்தாதாக பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவரான நியாஸ் புரோகி என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து 2021 ஆம் காலப்பகுதியில் வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்ததுடன் இலங்கை அரசின் மற்றுமொரு கொடூர முகத்தை பிரதிபலித்திருந்தது.

காரணம், யுத்த காலத்தில் தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு கோரிக்கைகள் என்ற அடிப்படையில் பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் குறித்த வைத்தியர் வெளியிட்டிருந்த இந்த கருத்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியது.

ஒரு வேளை காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் கண்களே இவ்வாறு தோண்டி விற்கப்பட்டனவா என்ற ரீதியில் அரசு மீது சந்தேகம் எழுந்தது.

காரணம் சர்வதேச நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் கண் தான நடவடிக்கைகளை இலங்கை தரப்பு முதலிடத்தில் முன்னெடுத்து வந்தது.

இதனால், தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு மீதான நம்பிக்கை என்பது பெரிதும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த நடவடிக்கை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ரீதியிலும் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை எவ்வாறு இலங்கை அரசு புறக்கணித்ததோ அதே போல இந்த விவகாரத்தையும் இலங்கை அரசு புறக்கணித்தது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top