News

6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் சுட்டுக்கொன்ற ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

 

 

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன

இதையடுத்து, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருகின்றன. தங்கள் வசம் இருந்த இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட எஞ்சிய பணய கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியில் ஹமாஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும், இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து வெளியேறி வருவதால் காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர். முன்னதாக, 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top