News

வட கொரியாவில் இயங்கி வரும் கொடூர முகாம்கள்…

 

வட கொரியாவில் 65,000 பேர் சிறைகளில் கொடூரமான தண்டனைக்கு உட்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் எதிரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

வட கொரியாவில் பாதுகாப்பு மிகுந்த நான்கு சிறைகளில் தற்போது கடும் சித்திரவதை, பட்டினி, உழைப்பு என 65,000 பேர் துயரமனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவில் முகாம் 14, 16, 18 மற்றும் முகாம் 25இல் இந்த 65,000 பேரும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கைதிகள் அனைவரும் கட்டாய உழைப்பு, பட்டினி மற்றும் மிக மோசமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

வட கொரியாவில் இயங்கி வரும் கொடூர முகாம்கள்... | Brutal Camps In North Korea Shocking Background

இருப்பினும், இந்த நான்கு கொடூர முகாம்களும் செயல்படுவதாக வட கொரியா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை. ஆனால், செயற்கைக்கோள் புகைப்படங்கள், வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே அந்த முகாம்கள் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட கொரியாவில் இயங்கி வரும் கொடூர முகாம்கள்... | Brutal Camps In North Korea Shocking Background

 

ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கைதிகளின் வாக்குமூலம், விரிவான செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவைகளால் இந்தச் சிறைச்சாலையின் இருப்பு மற்றும் அங்கு நிகழும் கொடூரமான நடைமுறைகள், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிம்மின் உறவினர் Jang Song-thaek என்பவர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதை அடுத்து, 2013ல் இந்த முகாம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் பலர் இந்த முகாமில் சிறை வைக்கப்பட்டனர். Punggye-ri அணு நிலையம் அருகே முகாம் 16 செயல்படுகிறது என கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top