சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம், ஓடுபாதையில் இருந்து கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விமானத்தில் இருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை விமான நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விபத்தில் சிக்கிய விமானத்தில் சரக்குகள் எதுவும் இல்லை. இந்த விமானம் 32 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். முதலில் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு தற்போது சரக்கு விமானமாக மாற்றப்பட்டுள்ளது.