News

தீவிரமடையும் தமிழர் அடக்குமுறை: அரசாங்கத்தை எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி!

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான தர்மலிங்கம் சுரேஷிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்று (22.10.2025) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

செல்வராசா கஜேந்திரனுடன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டமை தொடர்பில் தர்மலிங்கம் சுரேஷ் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, அவருடைய பதிவில், “இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் (TID) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தேசிய அமைப்பாளரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) துணைத் தலைவர்களில் ஒருவரும் எனது நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரப்பூர்வ ஊழியர்களில் ஒருவருமான தர்மலிங்கம் சுரேஷிடம், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவேற்றியதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

 

சிங்கள பௌத்த தேசியவாதக் கதைக்கு சவால் விடும் அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்ட பல தமிழ் அரசியல் ஆர்வலர்களில் சுரேஷ் ஒருவர்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தி அதன் முந்தைய அரசியல் நிர்வாகங்களைப் போலவே மோசமடைந்து விட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top