News

ஆப்கானியர் காலி செய்த 1200 குடியிருப்புக்கள் இடிப்பு

 

 

ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட முகாம்களின் வீடுகளில் இருந்து ஆப்கானியர்கள் வௌியேறியதைத் தொடர்ந்து 1200 குடியிருப்புக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கராச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்து மேற்கு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தாரிக் இல்லஹி மஸ்டோய் குறிப்பிடுகையில்,

இத்தகைய முகாம்களில் இருந்து இற்றை வரையும் 14 ஆயிரத்து 296 ஆப்கானியர்கள் வீடுகளைக் காலி செய்து ஆப்கானுக்கு திரும்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே இக்குடியிருப்புக்களை இடித்து தரைமட்டமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

கராச்சியின் சோஹ்ராப் கோத்தில் நகர பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் முன்னெடுத்துள்ள இந்நடவடிக்கை அடுத்துவரும் சில தினங்களில் நிறைவு செய்யப்படும். மாலிமர் அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் ஐ.நா. இந்த முகாம்களை அமைத்துள்ளது. இம்முகாம் வீடுகளில் இருந்து ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து அந்த வீடுகளை சில சக்திகள் சட்டவிரோதமாக கையகப்படுத்த முயற்சிப்பதால் அமைதி சீர்குலைவு ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுக்கு அமைய இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top