News

கனடா வெளியிட்ட காணொளியால் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு

 

 

கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனடா மீது அமெரிக்க விதித்துள்ள வரிகளின் எதிரொலியாக இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந் நிலையில் வரி விதிப்பு தொடர்பாக கனடா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், வரிவிதிப்புகள் வர்த்தகப்போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அமெரிக்க அதிபர் டிரம்பை கோபப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தி விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;

கனடா ஒரு மோசடியான விளம்பரத்தை பயன்படுத்தி இருப்பதாக ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த வீடியோ போலியானது. அதில் வரிகள் பற்றி ரீகன் எதிர்மறையாக பேசுகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு வரிகள் மிகவும் முக்கியம். கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இதன் மூலம் நிறுத்தப்படுகின்றன.

இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top