News

உக்ரைனில் ரஷ்யாவின்பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்: பலர் படுகாயம்

உக்ரைன் (Ukraine) தலைநகரில் ரஷ்யாவின் (Russia) வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் கீவில் இன்று (25) அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஷ்ய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இந்தநிலையில், அதில் கீவில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: பலர் படுகாயம் | Russia Airstrike Kills 4 In Kyiv

ரஷ்யா மொத்தம் ஒன்பது ஏவுகணைகள் மற்றும் 62 ட்ரோன்கள் ஏவியதாகவும் அவற்றுள் நான்கு ஏவுகணைகளையும் மற்றும் 50 ட்ரோன்களையும் இடைமறித்து அழித்ததாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ரஷ்ய வான் வழி தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வான் வழி பாதுகாப்பு அமைப்பை வழங்கிட உக்ரைன் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: பலர் படுகாயம் | Russia Airstrike Kills 4 In Kyiv

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு – சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனிலிருந்து ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் மற்றும் 121 உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top