அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக 5,000 ரஷ்ய ஏவுகணைகளை தென் அமெரிக்க நாடொன்று நிலைநிறுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ (Nicolas Maduro), அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகளுக்கு எதிராக, நாட்டின் முக்கிய வான் பாதுகாப்பு பகுதிகளில் 5,000 Igla-S வகை குறுகிய தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த Igla-S ஏவுகணைகள், அமெரிக்காவின் Stinger ஏவுகணைகளுக்கு சமமானதாகும். இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை அழிக்க வடிவமைக்கப்பட்டவை.
“இந்த ஏவுகணைகள் நாட்டின் கடைசி மலை, நகரம், கிராமம் வரை நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என மடூரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, Carribean பகுதியில் 4,500 கடற்படை வீரர்களை நியமித்து, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நடவடிக்கை, மடூரோவை பதவியில் இருந்து நீக்குவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு பதில் நடவடிக்கையாக, மடூரோ தனது படைகளை மறுவியூகம் செய்து, 8 மில்லியன் ரிசர்வ் வீரர்களை நிலைநிறுத்தியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இந்த எண்ணிக்கையின் நம்பகத்தன்மை குறித்து நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
