கனடாவுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் 10 வீதத்தால் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை¸ ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதை அடுத்தே, ட்ரம்பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரத்தை “மோசடி” என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், கனேடிய அதிகாரிகளை சாடியுள்ளார்.
உண்மைகளை கனடா தவறாக சித்தரித்தால், அந்த நாட்டின் மீதான வரியை, இப்போது செலுத்தும் தொகையை விட 10வீதமாக உயர்த்துவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தின் அடிப்படையில், முன்னதாக, ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஒன்றாரியோ முதல்வரும் குறித்த விளம்பரத்தை நீக்குவதாகக் கூறியிருந்தார். எனினும் ட்ரம்ப் மீண்டும் கனடாவுக்கு எதிராக தமது வெறுப்பை வெளிக்காட்டியுள்ளார்.
