வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளமையானது தமிழ் அரசியல் பரப்பில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கட்சி எடுக்கும் தீர்மானம் இறுதித்தீர்மானம் என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அடிப்படையாக கொண்டே சி.வி.கே. சிவஞானம் முன்னதாகவே ஆரூடம் கூறிவிட்டார் என்றே தோன்றுகின்றது.
மேலும், அநுரவை எதிர்க்கின்றோம் என்று சுமந்திரனையே முதலமைச்சர் வேட்பாளராக்குவதற்கு திரைமறைவில் சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
வடக்கில் சுமந்திரன் கிழக்கில் சாணக்கியன் என்று தமிழரசுக்கட்சி முதலமைச்சர் வேட்பாளர்களை களமிறக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
