ரஷ்ய தலைநகர் மொஸ்கோ அருகே எரிபொருள் நிலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷ்ய படைகளுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்திற்கான எரிபொருள் எடுத்துச் செல்லும் முக்கிய வழித்தடமாக கோல்ட்செவோய் குழாய்வழி உள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள மொஸ்கோ, ரையாஸன், நிஸ்நி நோவ்கொரோட் ஆகிய பகுதிகளிலிருந்து ரஷ்ய முப்படைகளுக்கும் தேவையான டீசல், கேசொலின், ஜெட் எரிபொருள் ஆகியவை இந்தக் குழாய் வழி சுமார் 400 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில், ஆண்டுதோறும் 30 லட்சம் தொன் ஜெட் எரிபொருள், 28 லட்சம் தொன் டீசல், 16 லட்சம் தொன் கேசொலின் ஆகியவை இந்தக் குழாய்வழி எடுத்துச்செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஒக். 31) நள்ளிரவில் ரஷ்யாவின் ராமென்ஸ்கி மாவட்டத்தில் நடத்தப்பட்ட உக்ரைனின் துல்லிய தாக்குதல்களில் 3 முக்கிய எரிபொருள் குழாய்கள் சேதமடைந்திருப்பதாக உக்ரைனின் இராணுவ முகமைகளுள் ஒன்றான ‘எச்.யூ.ஆர்’ டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
