எகிப்தில் உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கிராண்ட் எகிப்தியன் மியூசியம் என குறித்த அருங்காட்சியகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகம் இன்று (01) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகாமையில் கிஸா பள்ளத்தாக்கில் பிரமிடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதே வடிவத்தில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியக வளாகம் மொத்தம் 50 ஹெக்டேர் பரப்பளவில் 2,58,000 சதுர அடியில் (70 கால்பந்து திடல் அளவு) தன்னகத்தே மூன்று பிரமிடுகளையும் ஸ்பின்க்சையும் உள்ளடக்கியதாக 50,000 இற்கும் மேற்பட்ட பழங்கால கலைநயப் பொருள்களை கட்டமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பல்வேறு நாடுகளிலிருந்தும் எகிப்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இந்த வளாகத்தை நவம்பர் நான்காம் திகதி முதல் ழுழுமையாகச் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
