News

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யுத்தம் நிறைவடைந்து  இவ்வளவு வருடங்களாகியும் இதுவரை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் விருப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். தமிழர்கள் தமது விருப்பை தாமே தீர்மானிக்க வேண்டும்.

குறித்த விடயங்களை முன் நிறுத்தி அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. இதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து கலந்து கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top