அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு இன்று சரக்கு விமானம் புறப்பட்டது.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிச்செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்த நிலையில் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
