News

பிரித்தானிய அரகுடும்பத்திலுள்ள மற்றுமொருவரின் பட்டமும் பறிக்கப்படலாம்..வெளியான எச்சரிக்கை!

பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்து இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரின் பட்டங்களும் பறிக்கப்படலாம் என ராஜகுடும்ப நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரது விண்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

தவறான நடத்தையுள்ள ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, அரச குடும்பத்தை அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

நவீன பிரித்தானிய வரலாற்றில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், ராஜகுடும்ப நிபுணரான லீ கோஹன் (Lee Cohen) என்பவர், ஆண்ட்ரூவைக் குறித்து வந்த செய்தியைப்போல, எப்போது ஹரி மேகன் தம்பதியரைக் குறித்த செய்தி வரும் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித திறமையும் இல்லாத, சரியான முடிவு எடுக்கத் தெரியாத, மனிதத்தன்மையற்ற, கெட்டது தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத ஹரியும் மேகனும், இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டதை அறிந்து பதற்றத்தில் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், பட்டங்கள் பறிக்கப்படும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது, அவர்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அடுத்தபடியாக பட்டங்கள் பறிக்கப்படும் ராஜகுடும்ப உறுப்பினர்கள் ஹரி மேகனாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top