News

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா

 

உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என, போர் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘மினிட் மேன் — 3’ ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.அணு ஆயுதம் இன்றி இந்த சோதனை நடந்ததாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் படைத்தளத்தில் இருந்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டது.

இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும், சோதனைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top