Canada

கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற தமிழர்

கனடாவின் உயரிய இராணுவ விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார்.

யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்ற முதல் இலங்கைத் தமிழராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

கனடாவின் ஆளுனர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் அவருக்கு விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மிக உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர் | Tamil Canadian To Receive Canadian Armed Forces

மதியாபரணம் ஏறக்குறைய 30 ஆண்டுகள் கனடாவில் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றார்.

உள்நாட்டுப் போரால் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றார்.

விருதைப் பெற்ற பின்னர் வாகீசன் மதியாபரணம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறியுள்ளார்.

மேலும், “ஏதிலியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளதென நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவரின் சாதனை, கனடாவில் வாழும் தமிழ் சமூகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top