கனடாவில் புதிதாக, Buy Canada கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “நம்பிக்கையிலிருந்து மீள்தன்மைக்கு மாற, கனடா அதன் சொந்த சிறந்த வாடிக்கையாளராக மாற வேண்டும்.
எங்கள் புதிய Buy Canada கொள்கை, நாடு முழுவதும் வீட்டுவசதி மற்றும் பெரிய திட்ட கட்டுமானத்தின் மையத்தில் கனேடிய பொருட்கள் மற்றும் வளங்களை வைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Buy Canada கொள்கையானது, கனடாவில் நடைபெறும் வீடமைப்பு மற்றும் முக்கியமான கட்டுமான திட்டங்களில் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களும் வளங்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டது.

இந்த கொள்கை குறிப்பாக வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதை முக்கியத்துவப்படுத்துகின்றது.

இதன் மூலம், கனேடிய தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆதாயம் பெறுவர். உள்நாட்டு பொருளாதாரம் வலுப்படும். மொத்தத்தில், “Buy Canadian Policy” கனடாவின் வளர்ச்சியை மையப்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
