News

இனி மனிதன் 150 ஆண்டுகள் வாழலாம் – சீன ஆராய்ச்சியில் மருந்து கண்டுபிடிப்பு

மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய மாத்திரை ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லான்வி பயோசயன்சஸ் (Longevity Biosciences) என்ற சீன நிறுவனம் உருவாக்கி வரும் “எண்டி ஏஜிங்(Anti-aging)” எனப்படும் இந்த மாத்திரை, முதுமையை தாமதப்படுத்தி உடலின் ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் திறனுடையதாக கூறப்படுகிறது.

சீன விஞ்ஞானிகள், இந்த மாத்திரையை முதலில் எலிகளுக்கு அளித்து ஆய்வு செய்தபோது, அவற்றின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் நீண்டதை கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, இதே மருந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், அவர்களின் வாழ்நாள் 150 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஒரே ஒரு மாத்திரை! வெளிநாடொன்றின் அசாத்திய கண்டுபிடிப்பு | Discovery Of A Pill That Increases Human Lifespan

 

தற்போது இந்த ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத்திரைகள் திராட்சை விதைச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

இது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை (Senescent Cells) காாத்து, வயதான அல்லது சேதமடைந்த செல்களை குறிவைத்து அழிக்கும் என கூறப்படுகிறது.

இதனால் உடல் இயல்பாக புத்துணர்ச்சி பெற்று, முதுமை தாமதமாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

லான்வி நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, “சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவ பராமரிப்பு இணைந்தால், இந்த மருந்து மனிதர்களை 150 வயது வரை வாழச் செய்யும்” என தெரிவித்துள்ளது.

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஒரே ஒரு மாத்திரை! வெளிநாடொன்றின் அசாத்திய கண்டுபிடிப்பு | Discovery Of A Pill That Increases Human Lifespan

 

மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என விஞ்ஞான ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.எனினும், பெரும்பாலானோர் அதற்குமுன் உயிரிழக்கின்றனர்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு உலகளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top