சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது.
திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர், 6 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அதிகாரி பல சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சரியான விபரத்தை அவர் குறிப்பிடவில்லை.
சிரியாவில் மார்ச் 2011இல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
