Canada

ரஷ்யாவுக்கு எதிராக கனடா அரசின் அதிரடி தீர்மானம்

ரஷ்யாவுக்கு எதிராக கனடா புதிய தடைகளை விதித்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார்.

நயாகரா பிராந்தியத்தில் நடைபெறும் G7 நாடுகள் குழுவின், வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்போர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தடைகளை தவிர்க்கும் நோக்கில் ரஷ்யா பயன்படுத்தும் மறைமுகக் கடற்படையையும் (shadow fleet) இலக்கு வைத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, ரஷ்யா மீண்டும் உக்ரைனின் மின்சார வலையமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் , G7 வெளிநாட்டு அமைச்சர்கள்,யுக்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடமிருந்து நேரடி விளக்கத்தை கோரவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top